மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீமான் தலைமையை ஏற்க முடியாது: நாம்தமிழர் கட்சி செய்தித்தொடர்பாளர் அய்யநாதன்

நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், தன்னிச்சையாக செயல்படுவதால் அக்கட்சியில் சீமான் தலைமையில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது  என்றார் அக்கட்சியின் சர்வதேச

News image
Updated On :15 பிப்ரவரி 2015, 9:30 am

பார்திபன்

நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், தன்னிச்சையாக செயல்படுவதால் அக்கட்சியில் சீமான் தலைமையில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது  என்றார் அக்கட்சியின் சர்வதேச செய்தித்தொடர்பாளர் அய்யநாதன்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான சுபா.முத்துக்குமார் புதுக்கோட்டை  அண்ணா சிலை அருகே கடந்த 2011 பிப்.15-ம் தேதி இரவு மர்மநபர்களால்  கொலை  செய்யப்பட்டார். இந்நிலையில்,வடகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய  நாம்தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித்தொடர்பாளர் அய்யநாதன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:  

நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், தன்னிச்சையாகவும்  சீமான் செயல்படுவதால்  கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. ஆகையால்,  எங்களால்  அக்கட்சியில் சீமான் தலைமையில்  செயல்பட  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் விருப்பத்துக்கு எதிராக இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சிப்பது ஐநா பிரகடனத்துக்கு எதிரானது. அதோடு, இலங்கையில் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை அகற்றப்படாமல்  நிலத்தை மீட்க இயலாது.

மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையை பிடிவாதமாக கொண்டுள்ளவர்கள் சிறிசேனாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்பகுதிகளில் இருந்து  ராணுவத்தை அகற்ற வாய்ப்பில்லை. எனவே இங்குள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்.

தமிழ்நாட்டில் 2016-ல் சட்டப்பேரவைத்  தேர்தலில் நாங்கள் போட்டியிட உள்ளோம்.  சிவகங்கை மாவட்டத்தில்  மத்தியஅரசின் மீத்தேன்திட்ட சோதனை முயற்சிக்கு எதிராக செயல்பட்ட அந்த மாவட்டச் செயலர் மாறன், அந்த மாவட்டத்துக்குள்பட்ட காரைக்குடி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல,  படிப்படியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். யார் தலைமையில் நாம்தமிழர் கட்சி செயல்படும் என்பது குறித்து  நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு மாதத்தில்  முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.