காட்டுமன்னார் கோயிலில் விவசாயிகளின் சிலுவையில் அறையும் போராட்டம்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரி பாசன மதகுகளில் மேல்பகுதியில் உள்ள கூண்டுகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகளின் சிலுவையில் அறையும் போராட்டம் நடைபெற்றது


காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம்ஏரி பாசன மதகுகளில் மேல்பகுதியில் உள்ள கூண்டுகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகளின் சிலுவையில் அறையும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியில் கீழ்பகுதியில் 28 பாசன மதகுகளும், மேற்கு கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன. இதன் மூலம் 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. புதிய வீராணம் திட்டத்தின் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிற காரணத்தால் பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
விவசாயிகள் தண்ணீர் தேவைப்படும் போது ஏரியில் உள்ள மதகுகளில் இருந்து விவசாயிகளே நீரை திறந்து எடுத்து வருகின்றனர். இதனால் வீராணம்ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் அனுமதியின்றி ஏரியில் உள்ள மதகுகளில் மேல்பகுதியில் நீரை திறக்க முடியாத அளவில் இரும்பிலான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கூண்டு அமைத்ததை கண்டித்தும், அதனை அகற்ற வலியுறுத்தியும், வீராணம்ஏரியை தூர்வார வலியுறுத்தியும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு சிலுவையில் அறைந்து கொள்ளும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பிரகாஷ், இந்திய கம்யூ கட்சி ராமச்சந்திரன், நஜீர்அகமது, பாலு, வைத்தியநாதன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஜிபு, சிங்கராஜன், அழுகுராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் மாதத்திற்குள் கூண்டுகளை அகற்றவில்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டமாக கூண்டுகளை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...