கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலை. உதவிப்பேராசிரியர் மீது வழக்குப் பதிவு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2015, 6:16 am

ஜி.சுந்தரராஜன்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக தமிழகஅரசு ஏற்று நடத்தி வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள அரசு முதன்மைச் செயலரான ஷிவ்தாஸ்மீனா பல்வேறு நீர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு விதிப்படி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள்
உண்மைத்தன்மை கண்டறியும் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன் (35). விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இவர் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியாக கொடுத்து பணியில் சேர்ந்ததாக பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் உதவிப் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.