நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் உதயகுமார் என்பவரை நகர்மன்ற உறுப்பினர் அன்பு என்பவர் சரமாரியாக தாக்கியதைத் தொடர்ந்து பழனி நகராட்சி அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு


பழனி நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் உதயகுமார் என்பவரை நகர்மன்ற உறுப்பினர் அன்பு என்பவர் சரமாரியாக தாக்கியதைத் தொடர்ந்து பழனி நகராட்சி அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். செயலர் காளிமுத்து முன்னிலை வகித்தார். நகராட்சி அலுவலர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும், பாதிக்கப்பட்ட துப்புரவு ஆய்வாளருக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்திடவும், அவர் மீது தாக்குதல் நடத்திய நகர்மன்ற உறுப்பினர் மீது தக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திடவும் கோரி பலரும் உரை நிகழ்த்தினர். அப்துல்காதர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...