/

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 19 பேர் கைது

இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரை கடலோர காவல் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2015, 1:16 pm

இன்பராஜ்

இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரை கடலோர காவல் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 4 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதாக புகார் எழுந்தது. இதையெடுத்து, இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான வைபவ் ரோந்து கப்பல் இந்திய கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 50 கடல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை  இலங்கையைச் சேர்ந்த 4 விசைப்படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை ரோந்துப் படையினர் பார்த்தனர்.இதையெடுத்து, அந்த விசைப்படகுகளை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

மேலும், படகுகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள் 19 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைப்படகு, அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள்,  அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட 19 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை கடலோர காவல் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், வருவாய்த் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவுத் துறை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.