வீராணம்ஏரியை தூர்வார வேண்டும்: ஒன்றுபட்ட விவசாயிகளின் சங்கத் தலைவர் என்.ராமமூர்த்தி
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தாமல் கொண்டு செல்வதுதான் மிகவும் வேதனையாக


கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தாமல் கொண்டு செல்வதுதான் மிகவும் வேதனையாக உள்ளது என சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா ஒன்றுபட்ட விவசாயிகளிள், விவசாயத் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் என்.ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி தூர்ந்து போய் உளளது. குறிப்பாக லால்பேட்டை அருகே ஏரியில் மரம் செடிகள் வளர்ந்து காடு போல் உள்ளது. எனவே வீராணம்ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடல்நீர் உட்புகுந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், ஆறுகுள் ஆழப்படுத்த வேண்டும். புவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கே ஒரு புதிய நீர்தேக்கத்தை உருவாக்க வேண்டும். சேத்தியாத்தோப்பிலிருந்து கூடலையாத்தூர் வரை வெள்ளாற்றின் இருபக்க கரைகளை வலிமையான உயர்ந்த தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டும். வீணாக கடலில் கலக்கும் மழைநீரை தேக்கி வைக்க தடுப்பணைகளை அரசு உடனடியாக கட்ட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாத இறுதியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் முன்பு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என என்.ராமமூர்த்தி தெரிவித்தார்.
பேட்டியின் போது செயலாளர் எஸ்.ரங்கநாயகி, துணைத் தலைவர் என்.ஆர்.எஸ்.பாண்டியன், வட்டாரத் தலைவர்கள் கே.திருவரசமூர்த்தி (புவனகிரி), ஜி.சச்சிதானந்தம் (கீரப்பாளையம்), எஸ்.சின்னதுரை (பரங்கிப்பேட்டை) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...