தாமரை ஊரணியைச் சேர்தவர் பிரசாத்குமார், இவர் பிப், 25 ம்தேதி மாலை தனக்கு சொந்தமான தோட்டத்து வேலியில் 2 ஆண் மயில்கள் மயக்கமடைந்த நிலையில் முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார், பின்னர் இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் ஏ. சகாயராஜ், சி. காமராஜ் (போக்குவரத்து) உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் முள்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 தேசிய பறவையான மயில்களை மீட்டு, இலுப்பூர் நவம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்ததை தொடர்ந்து 2 மயில்களுக்கும் உயிர் பிழைத்ததை தொடர்ந்து வனத்துறையினரிடம் அம்மயில்கள் ஒப்படைக்கப்பட்டது.