கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஏழைகளின் வறுமையை போக்கும் பட்ஜெட்: தமிழிசை சவுந்தரராஜன்

மத்தியஅரசின் பட்ஜெட் ஏழைகளின் வறுமையை போக்கு பட்ஜெட்டாகவும், வளர்ச்சியை மீட்டெடுக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

News image
Updated On :28 பிப்ரவரி 2015, 12:19 pm

ஜி.சுந்தரராஜன்

மத்தியஅரசின் பட்ஜெட் ஏழைகளின் வறுமையை போக்கு பட்ஜெட்டாகவும், வளர்ச்சியை மீட்டெடுக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சனிக்கிழமை வெளியிடப்பட்ட மத்தியஅரசின் பட்ஜெட், மக்களுக்காக சமர்பிக்கப்படும் பட்ஜெட்டாக உள்ளது. தமிழகத்தை கவனத்தில் கொண்டு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மிகப்பெரிய மருத்துவமனைகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு திட்டத்துடன் மக்களின் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பட்ஜெட்டாக திகழ்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேச நலன் போன்று தேக நலனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு சலுகைகள், ஓய்வூதியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 1947-ல் சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவில் கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் 60 சதவீதம் உள்ளன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள், கல்வியறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை குறைய போகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை போட்டப்பட்ட பட்ஜெட்டில், இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாக திகழ்கிறது. அதற்கு பிரதமர் நரேந்திரமோடி, அருண்ஜேட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த இரட்டை வழிப்பாதைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்கு இந்த பட்ஜெட்டில் நிதிஒதுக்கப்பட்டுள்ளது. அவை மட்டுமல்லாம் ஏற்கனவே இயங்கும் ரயில்களை விரைவுபடுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்து கணிப்பில் 76 சதவீத மக்கள் ரயில்வே பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மீனவர்களை மீட்க பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்திர தீர்வு காண நரேந்திரமோடி, சுஷ்மாசிவராஜ் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.