மம்சாபுரத்தில் வீடு புகுந்து ரூ.1.80 லட்சம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், 1-வது மெயின் ரோட்டியில் குடியிருந்து வருபவர் சுந்தரி (45). இவரது கணவர் கோவிந்தன். ஜனவரி 1-ம் தேதி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டியில்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரத்தில் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், 1-வது மெயின் ரோட்டியில் குடியிருந்து வருபவர் சுந்தரி (45). இவரது கணவர் கோவிந்தன். ஜனவரி 1-ம் தேதி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டியில் உறவினர்கள் இறந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்களாம். 2-ம் தேதி கோவிந்தன் மட்டும் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பின்னர் ஆடு கிடையை பார்க்கச் சென்றுவிட்டாராம். அப்போது வீட்டைப் பூட்டி வழக்கம்போல், சாவியை கதவின் நிலை மீது வைத்துச் சென்றுள்ளார். 3-ம் தேதி (சனிக்கிழமை) காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து கம்மாப்பட்டி சென்று மனைவியை அழைத்துக் கொண்டு வந்து வீட்டைப் பார்த்துள்ளார். பீரோவின் உள்ளே உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வேறொரு சாவி இருந்துள்ளது. உள்ளே இருந்த பணம் ரூ.1.80 லட்சம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு உள்ளிட்டவை அப்படியே இருந்துள்ளது.
இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...