இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேன் வாங்கிக் கொண்டு மோசடி: பணம் கேட்டவரை தாக்கியவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி நாடார் மகன் அண்ணாமலைராஜா (29). இவரது வேனை, கோட்டைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மா.மாரிமுத்து

News image
Updated On :3 ஜனவரி 2015, 2:19 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேனை ரூ.10.15 லட்சம் பேசி வாங்கிவிட்டு, தவணையை செலுத்தாமல் இருந்ததைத் தட்டிக் கேட்டவரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கன்னிமார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி நாடார் மகன் அண்ணாமலைராஜா (29). இவரது வேனை, கோட்டைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மா.மாரிமுத்து என்பவருக்கு ரூ.10.15 லட்சத்திற்கு கிரையம் பேசி, ரூ.1 லட்சம் அண்ணாமலைராஜா வாங்கியுள்ளார். மீதி பணத்தை தவணையாக கட்ட ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஒப்பந்தப்படி வங்கியில் மாரிமுத்து பணம் செலுத்தவில்லையாம். இதனிடைய வேனை வேறொரு நபருக்கு மாரிமுத்து விற்றுவிட்டாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அண்ணாமலைராஜா புகார் செய்தார். போலீஸார் இரு தரப்பையும் விசாரித்துள்ளார்கள். மாரிமுத்து 40 நாட்களுக்குள் தவணையை வங்கியில் செலுத்திவிடுவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னதுபோல, பணம் கட்டவில்லையாம். 7.9.14-ம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த மாரிமுத்துவிடம், அண்ணாமலைராஜா பணத்தைக் கேட்டுள்ளார். மாரிமுத்து, அண்ணாமலைராஜாவை ஆபாசமாகப் பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் அண்ணாமலைராஜா புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.