/

ஆசிரம முற்றுகைப் போராட்டம் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆசிரம பிரசாத் சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையை மீண்டும் ஆசிரமத்தில் தங்க வைக்க வேண்டும். ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக

News image
Updated On :6 ஜனவரி 2015, 10:25 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரம பிரசாத் சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தையை மீண்டும் ஆசிரமத்தில் தங்க வைக்க வேண்டும். ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஆசிரமத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மர்ம சாவுகள், நில அபகரிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரம சகோதரிகள், அவர்களது தந்தையாருக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு உரிய இழப்பீட்டு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 7-ந்தேதியன்று அரவிந்தர் ஆசிரம முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஆசிரமப் பிரச்சனைக் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதே நாளன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதால், வேறு நாளில் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே, வரும் வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில், தலைமை அஞ்சலகம் அருகில் ஒன்றுகூடி, அரவிந்தர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பாளர் கோ.சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.