கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சிகள்!

வீரவணக்கநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு, அவரது 50-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :25 ஜனவரி 2015, 12:36 pm

ஜி.சுந்தரராஜன்

வீரவணக்கநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு, அவரது 50-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக: கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் அதிமுகவினர் சிதம்பரம் காந்திசிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன்சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம், நாகமுருகுமாறன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள்,  மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர்  ரா.செந்தில்குமார், முன்னாள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர்,  நகர பேரவைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, மாணவரணி இணைச் செயலாளர் முத்தையன், நகர அவைத்தலைவர் யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக: நகர திமுக சார்பில் காந்திசிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன்சிலைக்கு நகரச்செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார். இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், ரா.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி லாரி டி.ராஜேந்திரன், சி.பன்னீர்செல்வம், நகர பொருளாளர் ஜாபர்அலி, இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், நகர துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூவேந்தர் முன்னேற்றக்கழகம்: மூமுக சார்பில் காந்திசிலையிலிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாநில இளைஞரணித் தலைவர் ஜி.எம்.ரவி வாண்டையார் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கோகுல் வாண்டையார், வைபவ் வாண்டையார், மாநில பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் முனிபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்

நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், கோ.நீதிவளவன், பால.அறவாழி, தமிழ்வளவன், கார்கிவளவன் நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, சிவக்குமார், ஆதிகுடியரசு, வெற்றிவேந்தன், சரித்திரன், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம்: தமிழத் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழக மாணவர் முன்னணி நிர்வாகி யமுணா ராணி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மா.கோ.தேவராசன், நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி சி.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன், வே.சுப்பிரமணியசிவா, இரா.எல்லாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதிமுக: கடலூர் மாவட்ட மதிமுக சார்பில் அக்கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஏ.என்.குணசேகரன் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், எம்.எஸ்.கந்தசாமி, சி.கே.பெருமாள், நகரமன்ற உறுப்பினர் எல்.சீனுவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், பெருமாள், பைந்தமிழன், மாவட்ட மாணவரணி குணசேகரன், ராஜ.எழிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.