சாராய பாட்டிலில் தலைமுடி: குடிமகன்கள் முற்றுகைப் போராட்டம்
வீராம்பட்டினத்தில் சாராய பாட்டில்களில் தலைமுடி உள்ளிட்டவை கிடந்ததாகக் கூறி குடிமகன்கள் சாராயக் கடையை முற்றுகையிட்டு


வீராம்பட்டினத்தில் சாராய பாட்டில்களில் தலைமுடி உள்ளிட்டவை கிடந்ததாகக் கூறி குடிமகன்கள் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரியாங்குப்பம் அருகே உள்ள வீராம்பட்டினத்தில் அரசுக்கு சொந்தமான சாராயக்கடை எண்.ஏ3 இயங்கி வருகிறது. இக்க்கடையில் விற்பனை செய்யப்படும் சாராயம் தரமற்றதாக உள்ளது. சாராய பாட்டில்களில் முடி உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த சாராயத்தைக் குடித்து ஏராளமானோர் இறந்துள்ளனர். மேலும், பலர் வயிற்று போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்களினால் அடிக்கடி அவதியடைந்து வருகின்றனர். எனவே, அதனை அரசு கண்காணிக்க வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த கலால்துறை வட்டாட்சியர் குமரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். அப்போது, தரமான சாராயம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்ற பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆய்வுக்கு மாதிரி சேகரிப்பு
அதனைத் தொடர்ந்து சாராயக்கடையில் உள்ள சாராய பாட்டில்கள் அனைத்தையும் வட்டாட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் ஆய்வுக்காக அதன் மாதிரியை எடுத்து, வில்லியனுôரில் உள்ள சாராய ஆலைக்கு அனுப்பி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...