சிதம்பரம் பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பல கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது
சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் வெல்டு கட்டர் மிஷன், சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களுடன் மர்மநபர்கள் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொருள்களை கடை


சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் வெல்டு கட்டர் மிஷன், சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களுடன் மர்மநபர்கள் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொருள்களை கடை காவலாளி பார்த்ததால் தெரியவந்தது பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போகாமல் தப்பியது.
சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் பிரபல நகைக்கடையான லட்சுமி விலாஸ் ஜூவல்லரி கடை உள்ளது. இவரது கடையின் பின்புறம் உள்ள மசூதி தோட்டத்தின் வழியாக பின்புற சுவர் ஏறி கொள்ளையடிக்க கொள்ளயர்கள் முடிவு செய்துள்ளார். இதற்காக காடு போன்று செடி, கொடிகளை மண்டியுள்ள மசூதி தோட்டத்தில் ஜூவல்லரி கடையின் பின்புறம், கேஸ் சிலிண்டர், வெல்டிங் சிலிண்டர், கட்டர் மிஷின், ஆஷா பிளேடுகள், கத்தி, முகமூடி, பூச்சிமருந்து, கேஸ் கொண்டு செல்ல பிளாஸ்டிக் குழாய் சுமார் 60 அடி நீளம் ஆகியவற்றை கொண்டு சென்று தயாராக வைத்துள்ளனர். மேலும் பின்புற சுவர் ஏறுவதற்கு வரிக்கயிற்றை ஜூவல்லரி கடை சுவர் உச்சியில் மாட்டியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை காலை கடைக்காவலாளி கடையின் பின்புற படி வழியாக மாடிக்கு சென்று பார்த்தபோது கடைசுவர் உச்சியில் கயிறு மாட்டியிருப்பதை பார்த்து கீழே எட்டிப்பார்த்த போது கீழே மேற்கண்ட பொருள்கள் தயார் நிலையில் இருந்ததை பார்த்து அதிரிச்சியுற்று கடை உரிமையாளருக்கு தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளர் சரண் இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். தகவல் அறிந்த கடலூர் ஏடிஎஸ்பி ராமசாமி, சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு மற்றும் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் புதன்கிழமை இரவு கடைக்குள் இரவு திருட முயற்சி செய்தது, காவலாளி பார்த்ததால் தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர். மேலும் கடலூரிலிருந்து மோப்ப நாய் அர்ச்சுன் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய் சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹால் அருகே உள்ள சாலை வரை ஓடி நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...