ஆனால் பொதுதீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளரிடம் தற்போது நிர்வாக குறைபாடுகள், விதிமுறை மீறல்கள் உள்ளது என்றும், மே.1-ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிக்கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், 1987-ம் ஆண்டில் ஜி.வாகீசம்பிள்ளை தலைமையில் திருப்பணிக்கமி்ட்டி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எனவே அதேபோல் வருகிற மே.1-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைத்து ஏழை, எளிய மக்கள் வழங்கும் குறைவான தொகைக்கும் ரசீது வழங்க வேண்டும், மேலும் வரவு மற்றும் செலவு தணிக்கை செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் 1894-ம் உச்சநீதிமன்ற சட்டவரைவுப்படி கோயில் நிர்வகிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் நான் கொடுத்த மனு கொடுத்து நிராகரிக்கப்பட்டது. எனவே தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு திருப்பணி கமிட்டி அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என மனுவில் ஆர்.யு. கனகசபேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.