முல்லைப் பெரியாறு துணைக்குழு அதிகாரிகளின் வாகனங்களை மறித்து போராட்டம்: 5 பேர் கைது
முல்லைப் பெரியாறு அணை துணைக்குழு கூட்டத்தை தமிழக பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி, செவ்வாய்கிழமை தமிழக அதிகாரிகள் சென்ற வாகனத்தை மறித்து போராட்டம்


முல்லைப் பெரியாறு அணை துணைக்குழு கூட்டத்தை தமிழக பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி, செவ்வாய்கிழமை தமிழக அதிகாரிகள் சென்ற வாகனத்தை மறித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் ஐந்து பேரை கூடலூர் தெற்கு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், பெரியார் மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல் மற்றும் உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் துணைக்குழு அமைக்கப்பட்டள்ளது. இந்த துணைக்குழுவின் கூட்டம் செவ்வாய்கிழமை முன்தினம் குமுளியில் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு தமிழகத்திடம் உள்ளபோதும் கேரளப்பிரதிநிதிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. அணையின் கசிவுநீர் மாதிரியை எடுப்பது, மதகுகள் சோதனை செய்வது போன்றவற்றில் அவர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. ஆகையால் தமிழக அதிகாரிகள் துணைக்குழுவின் கூட்டத்தை தவிர்த்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் அக்கட்சியினர் செவ்வாய்கிழமை தமிழக அதிகாரிகள் சென்ற வாகனத்தை கூடலூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே மறித்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அரசு பணியாளரான தன்னை பணிசெய்யவிடாமல் நாம்தமிழர் கட்சியினர் தடுத்தனர் என முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளரும் துணைக்குழுவின் தமிழக பிரதிநிதியான மாதவன் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் தேவாரத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் ஜெயபால்(31),குருசாமி மகன் குணசேகரன்(33), கோம்பையைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் கண்ணன்(41), கூடலூர் பால்சாமி மகன் விஜயசேகர்(37), சுருளிராஜ் முருகன் என்ற முத்தமிழ் முருகன்(42) ஆகியோர்கள்மீது, ஐந்துபேர்களுக்கு மேல் கூட்டம் கூடி, அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து புதன்கிழமை கைது செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பினர். மேலும், மாவட்ட செயலாளர் வடிவேலுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...