நெல்லை: கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் முற்றுகை
பள்ளிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என புகார் தெரிவித்து திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பள்ளிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என புகார் தெரிவித்து திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள சிவந்திபட்டி, முத்தூர், கொடிக்குளம் ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்களிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்வேறு தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இக்கிராம மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வசதியாக சிவந்திபட்டி கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்புக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.சிவந்திபட்டி செல்லும் சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் காணப்படுவதால், சிவந்திபட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்போது சரிவர இயக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு வர முடியாமல் மாணவர், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிவடைந்த நிலையில் சிவந்திபட்டி கிராமத்திற்கு நகரப் பேருந்துகள் இயக்காததால் மாணவர்கள் இரவு 9 மணி வரை ஊருக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிவந்திபட்டி கிராமத்திற்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்க மாணவர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். பி்ன்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...