சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தட்டு ஏந்தி நூதனப் போராட்டம்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி நூதனப்

News image
Updated On :14 ஜூலை 2015, 11:39 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் பணியிலிருந்து ஓய்வுபெற்றத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வைப்பு நிதி, ஒப்படைப்புத் தொகை, விடுப்பு சம்பளம், பஞ்சப்படி உள்ளிட்ட பணப்பலன்களை நிர்வாகம் வழங்கவில்லை.கடந்த 5 ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற 800 பேருக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பணப்பலன்களை வழங்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கையில் தட்டு ஏந்தி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் பொ. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியூ செயலர் ஆர். மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் துணைச் செயலர் எஸ். பத்மனாபன், பொதுச்செயலர் எ்ஸ. முத்துக்கிருஷ்ணன், நிர்வாகிகள் டி. பத்னாபன், பி. முத்துக் கிருஷ்ணன், சண்முகநாதன், சேதுராமலிங்கம், பொருளாளர் ஆர். ராமையாபாண்டியன் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.