சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தார் கலாம்: கூடன்குளம் விஞ்ஞானிகள் உருக்கம்

முன்னாள் குடியரசு தலைவர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் எளிமைக்கு இலக்கணமாகத் திகழந்தார் என கூடன்குளம் அணுஉலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :29 ஜூலை 2015, 7:51 am

ஷேக் அப்துல்காதர்

முன்னாள் குடியரசு தலைவர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் எளிமைக்கு இலக்கணமாகத் திகழந்தார் என கூடன்குளம் அணுஉலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதன்கிழமை கூடன்குளம் அணுஉலையில் மறைந்த அப்துல்கலாமுக்கு வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலியில் விஞ்ஞானிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது விஞ்ஞானிகள் கூறியதாவது: அப்துல்கலாம் குடியரசு தலைவராக இருந்தபோதும், கூடன்குளம் அணுஉலைக்கு வருகை தந்தார். அதன்பின்னர் 2011 இல் அணுஉலை மற்றும் சுற்றியுள்ள பகுதியினை அவர் பார்வையிட வருகை தந்தார்.

குடியரசு தலைவராக வந்தபோதும், அதன் பிறகும் அப்துல்கலாம் மிகவும் எளிமையாக இருந்தார். எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தார். பிரச்னைகளை பொறுமையாக கையாளுங்கள் என்று அவர் தெரிவித்த கருத்துக்கள் இப்பவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.