/

கருணாநிதி பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில்  92 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

 திமுக தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 ஜூன் 2015, 8:45 am

இன்பராஜ்

 திமுக தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

 திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 92 ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். இதையெடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

 தொடர்ந்து, பகல் 12 மணிக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனை, எஸ்.எஸ்.மாணிக்கபுரம் ஊனமுற்றோர் பள்ளி, பிரையன்ட்நகர் காதுகேளாதோர் பள்ளி ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சிகளில், திமுக மாநகர செயலர் ஆனந்தசேகரன், மாநில செயற்குழு உறுப்பிர் ஆ.திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாவட்ட துணை செயலர் ராஜமோகன் செல்வின், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கோட்டுராஜா, பகுதிச் செயலர் சுரேஷ்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.