/

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 12 நீளமுள்ள மலைப்பாம்பு

கூடலூர் அருகே 12 நீளமுள்ள மலைப்பாம்பு குடியிருப்பு பகுதியில் புகுந்தது, அதை பிடித்து வனத்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

News image
Updated On :3 ஜூன் 2015, 3:53 pm

அறிவழகன்

கூடலூர் அருகே 12 நீளமுள்ள மலைப்பாம்பு குடியிருப்பு பகுதியில் புகுந்தது, அதை பிடித்து வனத்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் சாலையில் பகவதி அம்மன் கோயில் அருகே கண்ணகி நகர் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை திடீரென 12 அடி நீளமுள்ள மலைப்பு வந்துள்ளது. மலைப்பாம்பினை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூடலூரைச் சேர்ந்த வனசுந்தரபாண்டின் என்ற வனஉயிரின ஆர்வலர் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பினை பிடித்தார். பிடிபட்ட மலைம்பாம்பினை கூடலூர் மேற்கு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.  அந்த பாம்பினை மேற்கு தொடர்சி மலைப்பகுதி சுரங்கனாறு வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.