தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஜுன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியில் சேர 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தவில், நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப் பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வு இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
திருக்கோயில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, கலை ஆர்வமும் உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 23இ, 4 ஆவது தெரு, கணேஷ்நகர் மேற்கு, தூத்துக்குடி-8 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0461-2300605 என்ற தொலைபேசி எண்ணிலும், 94438 10926 என்ற செல்லிடைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...