/

தேக்கடி வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உடல் மீட்பு: தொடரும் வனவிலங்குகளின் உயிரிழப்பு

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :6 ஜூன் 2015, 3:45 pm

அறிவழகன்

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில், முல்லைப் பெரியாறு அணை பின் பகுதியில் வல்லக்கடவு மவுண்ட் வனப்பகுதியில் பழங்குடியினர் கொடுத்த தகவலின்பேரில், 5 வயது ஆண் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், இந்த உடல், தேக்கடி ராஜீவ் காந்தி ஆடிட்டோரியத்தில் வீடியோ பதிவுடன்  உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. சிறுத்தையின் சாவுக்கு உடனடி காரணம் எதுவும் தெரியவில்லை.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இரண்டு புலிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சில மாதங்களாக பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் யானை, புலிகள், சிறுத்தை தொடர்ந்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.