சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது?: நெல்லை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் சாரல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்வரத்தில் மாற்றம்

News image
Updated On :18 ஜூன் 2015, 12:52 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.

தாமிரவருணி பாசனத்தில் கார் சாகுபடி பணிகள் தொடங்க பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 7 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 4 மி,மீ மழையும், கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை பகலில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதியில் சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசுவதால் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.

கடும் வெப்பம் நிலவி வந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்தில் காணப்படுகிறது. வியாழக்கிழமை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 300 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 75 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 60 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.65 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.07 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 48.20 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 38.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 44 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 14.76 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 41.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.70 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4 அடியாகவும் இருந்தது.

1,000 கனஅடி திறப்பு: கார் பருவ சாகுபடிக்கு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப் பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை பாசனத்திற்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து 75 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 60 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு்ள்ளது.

பருவ மழை தொடர்ந்து பெய்து நீர்வரத்து கிடைத்த பிறகுதான் இம்மாவட்டத்தில் பிற அணைகள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.