கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கார் பருவ சாகுபடி: நெல்லை மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு

நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் புதன்கிழமை

News image
Updated On :24 ஜூன் 2015, 12:36 pm

ஷேக் அப்துல்காதர்

நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்தார்.

கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து இம்மாதம் 16 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பாசனத்திற்காக வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், கோடகன் கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சாகுபடி பணிகளை முழு வீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். கன்னடியன் கால்வாய், நதியுன்னி கால்வாய்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் தாமதமாக திறக்கப்பட்டது. கார் சாகுபடி பணிகள் இம்மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியதாவது: கார் பருவ சாகுபடி பணிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், கடையம், ஆழ்வார்குறிச்சி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 450 ஹெக்டேரில் நாற்றுப் பாவப்பட்டுள்ளது.

நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாசனத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாசனத் தேவைக்கு தட்டுபாடு இல்லாமல் உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு பாசனத்தில் நடவு செய்யப்பட்டு 45 நாட்கள் பருவத்தில் நெல் பயிர் உள்ளது. சிவகிரி பகுதியில் குளங்களில் இருப்பு இருந்த நீரை கொண்டு சுமார் 1,500 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டு் தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.