பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர்


தூத்துக்குடி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகேயுள்ள கடலையூரைச் சேர்ந்தவர் ஜெபராஜ் (27). இவருக்கும், சிவகாசியைச் சேர்ந்த அந்தோணி மகள் மாலதிக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 8.2.2010 இல் மாலதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாலதியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது உடலை ஜெபராஜ் குடும்பத்தினர் எரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மாலதியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை அந்தோணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் ஜெபராஜ், அவரது தந்தை ஞானமுத்து, தாய் பூமணி, உறவினர்கள் ஆறுமுக்கனி, மரியதங்கம், சண்முகத்தாய் ஆகியோர் மாலதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 52 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...