வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு பதிவு
தமிழ்நாடு அரசு கேபில் டிவி வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீது ராயப்பன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு கேபில் டிவி வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீது ராயப்பன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் பாஸ்கரன், குருநாதன் ஆகியோர் உள்ளூர் சேனல் நடத்தி வந்தார்களாம். இதில் ஆபாச திரைப்பபடம் திரையிடுவதாகவும், சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்புவதாகவும் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதன்பேரில், ஜூன் 25 நேரடியாக ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் ஒருவருடன் வட்டாட்சியர் ஷேக் அயூப் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். வட்டாட்சியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குருநாதன், பாஸ்கரன் ஆகியோர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இது தொடர்பாக திங்கட்கிழமை வட்டாட்சியர் ஷேக் அயூப் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குருநாதன், பாஸ்கரன் ஆகியோர் உட்பட அடையாளம் தெரியாத சிலர் மீதும் வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...