கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும் மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.

News image
Updated On :3 மார்ச் 2015, 1:16 pm

ஜி.சுந்தரராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும் மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கருத்தும் காட்சிப்படுத்துதலும் என்ற பொருளில் பத்து நாள் பயிலரங்கத்தை நடத்தியது. பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல்துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: முதுகலைத் தமிழில் முதல் ஐந்து இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கவும் செம்மொழி மத்திய நிறுவனம் முயற்சிக்கும். அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் செயல்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பழந்தமிழ் இலக்கியங்களில் சிறப்புகளையும், பெருமைகளையும் வெளிக்கொணரும் வகையில் பயிலரங்கினை அமைத்து, பயிலரங்க கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுவது அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையின் சாதனையாகும் என முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜே.வசந்தகுமார் பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார். அவர் பேசியது: பழமையும், பெருமையும் கொண்ட தமிழியல்துறை பல்வேறு ஆக்கப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ் வளர்ச்சி பணிகளில் அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறைக்கு என்று தனித்த இடம் உண்டு. காலத்திற்கேற்ப தமிழியல்துறையும், தமிழ் ஆய்வுகளும்
நவீனப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பதிவாளர் ஜே.வசந்தகுமார் தெரிவித்தார். பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.ராஜா நன்றி கூறினார். விழாவில்முன்னாள் பேராசிரியர் காமாட்சிநாதன்,  தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்ப்பிரிவு தலைவர் முனைவர் ந.வெங்கடேசன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.