/

காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: அதிமுக வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 61 காரைக்கால் மீனவர்களை உடனே விடுவிக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி  உள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2015, 9:14 am

சுஜித்குமார்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 61 காரைக்கால் மீனவர்களை உடனே விடுவிக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி  உள்ளது.

அதன் மாநில செயலாளர் பெ.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 61 மீனவர்களையும் அவர்களின் ஏழு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த வெüóளிக்கிழமை கைது செய்து இலங்கை திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் அதனை கண்டிப்பதோடு, உடனடியாக அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

ஆனால் புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியை மீனவர்கள் சந்தித்து மனு தந்த பிறகு தான் கண்விழிக்கிறார். 61 மீனவர்களுடன் ஏழு படகுகளையும் சிறைபிடித்து இது நாள் வரை ஐந்து நாட்கள் ஆகியும் பிரதமருக்கோ, உள்துறை அமைச்சருக்கோ கடிதம் எழுதவில்லை.

நல்லவாடு மீனவ மக்களுக்கு சுனாமி வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவ

ரை முழுமையாக சுனாமி வீடுகள் வழங்கப்படவில்லை. காலாப்பட்டில் சுனாமி வீடுகளில் வாழும் மீனவ மக்களுக்கு டேங்கர் மூலமாக குடிநீர் வழங்குவதை தவிர்த்து நிரந்தரமாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடற்ற மீனவ மக்களுக்கு 4 லட்சம் ரூபாய் மானியம் தருவதாக அந்த துறை அமைச்சர் உறுதியளித்தார்.

ஆனால் வீடற்ற அந்த மீனவ மக்களுக்கு அவை வழங்கப்படவில்லை. இதனால் வெகுண்டெழுந்த வீராம்பட்டினம் மீனவ மக்கள் பெரும்பாலோனோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். அப்போதும் கூட இந்த அரசுக்கு சிந்தனை எட்டவில்லை.

இது மீனவ மக்கள் மீது ரங்கசாமிக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. உடனடியாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையில் மெத்தன போக்காக இருப்பது கண்டிக்க தக்கது என்றார் புருஷோத்தமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.