/

வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது இடமாகத் திகழும் சிவானந்தவல்லி.....

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

ச. மயில்வாகனன்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது இடமாகத் திகழும் சிவானந்தவல்லி உடனுறை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் திருத்தேர்கள் பவனி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாசிமகப் பெருவிழாவின் 9-ம் நாளான செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாச்சனம், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், உற்சவ பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமண்யர், சோமாஸ்கந்தர் (வீரட்டானேஸ்வரர்),  சிவானந்தவல்லி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வந்தனர். பின்னர் மாலையில் திருத்தேர்கள் நிலையை அடைந்தது.

மாசிமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை 7 மணியளவில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு மகா தீபாராதனை நடைபெற்று சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் காலை 11.30 மணியளவில் தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்குகொண்டு புனித நீராடினால் பித்ருக்கள் (முன்னோர்கள்) பூர்வ ஜென்ம பாவ தோஷம் நிவர்த்தியாகி, தங்களுடைய சகல செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.