புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: 15,762 பேர் பங்கேற்பு
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை காலை தொடங்கின. மொத்தம் 15,762 மாணவ, மாணவியர் இன்று பொதுத் தேர்வு எழுதினர்.


புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை காலை தொடங்கின. மொத்தம் 15,762 மாணவ, மாணவியர் இன்று பொதுத் தேர்வு எழுதினர்.
பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
புதுச்சேரியில் மொத்தம் 26 மையங்களிலும், காரைக்காலில் 7 மையங்களிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. 7,584 மாணவர்கள், 8178 மாணவியர் என மொத்தம் 15,762 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை இயக்குனர் குமார் தலைமையில் புதுச்சேரியில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் 2 பேர் கொண்ட பறக்கும் படை முழுநேர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...