உடல் பருமன் காரணமாக புற்று நோய் ஏற்படும் அபாயம்: மருத்துவர் தகவல்
உடல் பருமன் காரணமாக புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க புதுவை பிரிவு தலைவர் டாக்டர் சதீஷ் நல்லாம் தெரிவித்துள்ளார்.


உடல் பருமன் காரணமாக புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க புதுவை பிரிவு தலைவர் டாக்டர் சதீஷ் நல்லாம் தெரிவித்துள்ளார்.
இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரிவு சார்பில் இரண்டு நாள் மாநாடு கிருமாம்பாக்கம் மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவுத: அறுவை சிகிச்சை நிபுணர்களின் இரண்டாவது மாநாடு மகாத்மாகாந்தி மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. இதில் புற்றுநோய் முக்கிய தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. மார்பு புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்கள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், மற்றும் மாணவர்கள் என 350000க்ஷக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்த டாக்டர் சதீஷ் நல்லாம், புதுச்சேரியில் மது பழக்கம், உணவு கட்டுப்பாடின்மை போன்றவற்றின் காரணமாக புற்றுநோயால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதும் அதிகரிக்கிறது, புதுச்சேரியில் புற்றுநோய் பாதிப்பவர்களின் முழு விவரம் குறித்த தகவல் ஏதும் இல்லை. இதனால் புற்று நோயாளிகளின் விவரம் குறித்த தகவல்களை சேகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சதீஷ் நல்லாம். மருத்துவர்கள் கணேஷ் பாபு, முகிலன், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...