காவிரியின் குறுக்கே அணை: ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் பேரணி
காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து காவிரி


காவிரி அணையின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதத்துவில் புதிய அணை கட்டுவதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் பேரணியைத் துவக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டையில் இருந்து பேரணிப் புறப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேரணியில் ஏராளமான உழவர்கள், சுமார் 15 தமிழ் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
பேரணியை முன்னிட்டு நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோரும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...