கடலூர், சிதம்பரத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இன்ஸ்யூரன்ஸ் சட்டதிருத்த மசோதவை மக்களவையில் நாடாளுமன்ற மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், இன்ஸ்யூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26


இன்ஸ்யூரன்ஸ் சட்டதிருத்த மசோதவை மக்களவையில் நாடாளுமன்ற மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், இன்ஸ்யூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதமாக உயர்த்தியுள்ளதை கண்டித்தும் கடலூர் மற்றும் சிதம்பரம் ஆயுள்காப்பீட்டுக்கழக கிளை அலுவலகங்களில் நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூர் எல்ஐசி அலுவலகத்தில் வேலை நிறுத்தம் செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.வெற்றிவேல் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வெங்கடேசன், கோட்ட இணைச் செயலர் டி.மணவாளன். முகவர்கள் சங்கம் சார்பில் தாண்டவகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சம்மந்தம், அதிகாரிகள் சங்கம் சார்பில் என்.பாலகிருஷ்ணன், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச்செயலர்எம்.மருதவாணன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் பேசினர்.
சிதம்பரம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் பா.யோகநாதன் தலைமை வகித்தார். க.கமலகாசன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர் த.கனகராஜ், ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் எல்.மணிகண்டன், முகவர் சங்கம் பி.குமார், சங்கமேஸ்வரன், சிஐடியு சார்பில் ராகவேந்திரன், ஆட்டோ சங்கம் சார்பில் எம்.முத்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...