/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பேரவை நோக்கி கண்டனப் பேரணி

என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழை சட்டப்பேரவை நோக்கி கண்டனப் பேரணி நடந்தது.

News image
Updated On :11 மார்ச் 2015, 10:47 am

சுஜித்குமார்

என்.ஆர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழை சட்டப்பேரவை நோக்கி கண்டனப் பேரணி நடந்தது.

என்.ஆர்.காங்கிரஸ் அரசின் தேர்தல்கால அறிவிப்புகளை நிறைவேற்றகோரியும்,  ரேஷனில் வழங்கப்படும் 10 கிலோ அரிசிக்கு பதில் ரு.300 பணம் வழங்கும் திட்டத்தை உடனே கைவிடகோரியும், பொதுவிநியோக முறையை பலப்படுத்தக்கோரியும், அமைப்புசார தொழிலாளர்களுக்கு நலவாரியம் உடனே அமைக்ககோரியும்,அரசு பள்ளிகளை மேம்படுத்திட பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ரோடியர், சுதேசி , பாரதி பஞ்சாலைகைளை உடனே திறக்க வேண்டும்,  விவசாய நிலங்களை பாதுகாத்திடவும், கரும்பு விவசாயிகளின் பாக்கித்தொகைளை உடனே வழங்க வேண்டும்.

வீடற்ற மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.  புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்  நிறைவு செய்து வைத்து பேசினார்.

மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தமிழ்ச்செல்வன், சுமதி, பிரபுராஜ், உலகநாதன், இடைகமிட்டி செயலாளர்கள் மதிவாணன், நடராஜன், மணிபாலன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் முருகன், சந்திரா, சத்தியா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.