ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவம்
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில்


விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவத்தின் பிரதான நிகழ்ச்சியான தீ மிதித்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், புறவழிச்சாலையில் அமைந்துள்ள பெரிய மாரிம்மன்கோவில் வெகு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாநிலம் முழுமையும் இருந்து வந்து தீ மிதிப்பார்கள்.
இந்த ஆண்டு பங்குனி மாத பூக்குழி உற்சவம் மார்ச் 9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் 12-ம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் இருந்து நெருப்பு எடுத்து வரப்பட்டு, கோவில் முன்பு தீ வளர்க்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல் நடைபெற்றது. அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அபிசேஷம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலான (சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட) பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்தனர்.
விழாவில் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் வசதிக்கான நகரின் பல்வேறு இடங்களில் நீர், மோர் பந்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கே.முரளிதரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...