இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கலசலிங்கம் கலைக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 13 பேர் தேர்வு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விப்ரோ

News image
Updated On :21 மார்ச் 2015, 10:48 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விப்ரோ டெக்னாலஜி நிறுவனம் சனிக்கிழமை நடத்திய வளாக நேர்காணலில் 13 மாணவ மாணவியர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கலசலிங்கம் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்த வளாக நேர்காணலை விப்ரோ நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அலுவலர் ஜேம்ஸ் ஸ்டீபன், லினோவான், சத்தியநாராயணா ஆகியோர் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் மூலம் நடத்தினர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் 13 மாணவ மாணவியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வளாக நேர்காணலுக்கு முன்பாக நிறுவனம் குறித்து அலுவலர் ஜேம்ஸ் ஸ்டீபன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: விப்ரோ நிறுவனம் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவை புரிந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியில் சேருவோருக்கு இலவசமாக எம்.டெக் படிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், பதவி உயர்வுக்குத் தேவையான நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது என்றார்.

வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவ மாணவியரை கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், கல்லூரி முதல்வர் எஸ்.செல்வமணி, கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எம்.சுப்புராஜ் ஆகியோர் பாராட்டினர்.  வளாக நேர்காணலுக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.