புதுச்சேரி: இடைக்கால பட்ஜெட்டையே தொடர்ந்து தாக்கல் செய்யும் என்.ஆர். காங்கிரஸ் அரசு
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது.


புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் அரசு தொடர்ந்து 5-வது ஆண்டாக இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநில திட்டக்குழுக் கூட்டத்தில் ரூ.2800 கோடிக்கு (2015-16) ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் புதுவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையோடு தொடங்கியது. இரண்டு நாள்கள் துணைநிலை ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அதன்பின்பு ஆளுநர் உரை தொடர்பான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் அதன் பின்பு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் சபாபதி அறிவித்தார்.
பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவிப்பது வழக்கம். எத்தனை நாள்கள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு தீர்மானிக்கும்.
ஆனால் புதுச்சேரி அரசு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லை.
கடந்த 2014-15-ம் ஆண்டில் ரூ.2400 கோடிக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டதில் ரூ.2290 கோடி மட்டுமே செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், புதுவை அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...