/

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை: கனிமொழி

தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தூத்துக்குடி விமான நிலையத்தில்

News image
Updated On :21 மார்ச் 2015, 9:07 am

இன்பராஜ்

தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து திமுக தலைவர் கருணாநிதி போராடி வருகிறார். இந்த மசோதவுக்கு  அதிமுகவை தவிர்த்து 14 கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் பேரணி நடத்தின. நாடு முழுவதும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த மசோதாவை எதிர்கின்றனர். ஆனால் அதிமுக மட்டும் ஆதரிக்கிறது.மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதனை அதிமுக ஆதரிக்கும் என்பதில் ஆச்சரியப்படும் படி ஒன்றும் கிடையாது.  மத்திய அரசு தாமாகவே முன்வந்து மீத்தேன் திட்டத்தை கைவிடுவதாக கூறவில்லை. மத்திய அரசு பணியை கொடுத்துள்ள நிறுவனம் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டிய பணியை முறையாக செய்யாததால் அந்த நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகிறது என்பதால் மூடப்போகிறோம் என்று தான் கூறியுள்ளது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை தடை செய்து விட்டோம் என்று பொதுவாக அறிவிக்கவில்லை. மேலும், கர்நாடக மாநிலமே கொந்தளிக்கும் அளவுக்கு உள்ளது ரவி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மரணம். ஆனால் இங்கு வேளான் அதிகாரியின் மரணத்திற்க்கு திமுக மட்டும் தான் தொடாந்து கேள்வி எழுப்பி வருகிறது. தமிழகத்துக்கும் சட்ட ஒழுங்கிற்க்கும் எந்தவித சம்மந்தம் கிடையாது.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றார் அவர். இதையடுத்து,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வெங்கடேசபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.