லாஸ்பேட்டை கிராம நிர்வாக அலுவலகம்: பா.ஜ.க. வலியுறுத்தல்
லாஸ்பேட்டையில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மீண்டும் அதே பகுதியில் தொடரச் செய்யவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.


லாஸ்பேட்டையில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மீண்டும் அதே பகுதியில் தொடரச் செய்யவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், உள்ளிட்ட பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் லாஸ்பேட்டை அசோக் நகரில் இயங்கிவந்தது. தற்போது அதை புதுச்சேரி சாரம் பகுதிக்கு மாற்றி விட்டனர். பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகவும், லட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் தொகுதியாகவும், லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிகள் உள்ளன.
பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களுக்காகவும், கல்விச் சான்றிதழ்கள் பெறுவதற்காகவும், நாடி செல்ல வேண்டிய கிராம நிர்வாக அதிகாரிகளை தொகுதிக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத சாரம் பகுதிக்கு மாற்றி இர்புபதை பா.ஜ.க கண்டிக்கிறது.
லாஸ்பேட்டை மற்றும் கருவடிக்குப்பம் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாரம் வந்து செல்ல நேரடியாக பஸ் வசதியோ, டெம்போ வசதியோ இல்லை. இதனால் ஆட்டோவில் செல்ல ரூ.100 செலவாகிறது. ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதிகாரிகளின் தவறான அணுகுமுறை மற்றும் நடவடிக்கையால் மக்கள் துன்பத்துக்கு
ஆளாகின்றனர். பல்வேறு திட்டங்களுக்காக பொதுமக்கள் அதிகாரிகளைத் தேடிச் செல்லும் போது, அவர்கள் இருப்பதில்லை. மேலும் சில முக்கிய சான்றுகளுக்காக அவர்களை தேடிச் சென்றால் அலைக்கழிக்கின்றனர்.
தினக்கூலி ஊழியர்கள் குறிப்பிட்ட நாள்களில் தங்கள் வேலையை விட்டு அதிகாரிகளை பார்க்க தாலுகா அலுவலகம் செல்லும் போது அவர்களை பார்க்க முடியாத நிலையில் கூலி வேலை செய்வோர் தங்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக உழவர்கரை வட்டாட்சியர், மாவட்ட துணை ஆட்சியர் ஆகியோரிடம் பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மாநில பொதுச் செயலர் வி.சாமிநாதன் தலைமையில் கூட்டுறவு பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், தொகுதி தலைவர் முருகன், நிர்வாகிகள் சந்துரு, கிருஷ்ணன், புவியரசு, செல்வம், சுப்புராஜ் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...