நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தக் வலியுறுத்தி சிஐடியு பேரணி
நடைபாதை வியாபாரிகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த கோரி புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.


நடைபாதை வியாபாரிகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த கோரி புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
நடைபாதை, இரவு நேர சிற்றுண்டி, தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியோடு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதை புதுச்சேரியில் அமுல்படுத்த வேண்டும். நகராட்சி அதிகாரிகள், போலீஸôர் நடைபாதை வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது, அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நகராட்சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும், அனைத்து வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வோரை பாதுகாக்க வேண்டும், இரவு நேர சிற்றுண்டி கடைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். கீரைகள், நாட்டுகாய்கறிகளை விற்பனை செய்வோரையும் பாதுகாக் வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.காமராஜர் சிலையில் தொடங்கிய பேரணி, நேரு வீதி, மிஷன் வீதி, சட்டப்பேரவை
அருகே நிறைவடைந்தது. கெüரவ தலைவர் டி.முருகன் தலைமை தாங்கினார்.என்.பிரபுராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு சிறப்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், மாநில செயலர் ஆர்.ராஜாங்கம், சிஐடியு நிர்வாகிகள் ஜி.ராமசாமி, வேகு.நிலவழகன், கே.முருகன், வி.சுமதி, பி.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் சட்டப்பேரவையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...