கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்:  நெல்லையில் 44 பெண்கள் கைது

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுக்கடைக்கு பூட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்கள் 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 மே 2015, 10:18 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுக்கடைக்கு பூட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்கள் 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மது பழக்கத்தால் இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலத்தை இழந்து திசை மாறி செல்லும் நிலை உள்ளது. உழைக்கும் தொழிலாளர்களின் வருமானம் மதுக்கடைகள் மூலம் சுரண்டப்படுகிறது.  மது பழக்கத்தினால் தமிழக மக்களின் கலாச்சாரம், பாண்பாடு சீரழிந்து வருகிறது.குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் அதிகரித்து வரும் விபத்துக்களினால் உயிரிழிப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் போன்ற வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஏஐடியூசி கட்டுமான பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுக்கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வடக்குப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகில் திரண்டு அமைப்பை சேர்ந்த பெண்கள் கையில் பூட்டுடன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில தலைவி சரஸ்வதி இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இதில் ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எம்.எஸ். பாலகிருஷ்ணன்,  துணைச் செயலர் வி. நமச்சிவாயம், பொருளாளர் என். முருகன், கோபாலகிருஷ்ணன், தங்கமணி மற்றும் பெண்கள் பங்கேற்றனர். சரஸ்வதி உள்பட 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.