கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மணிமுத்தாறு அணையில் பாசனத்துக்கு 200 கனஅடி தண்ணீர் திறப்பு

மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் பாசனத் தேவைக்காக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மே 2015, 7:32 am

ஷேக் அப்துல்காதர்

மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் பாசனத் தேவைக்காக 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கால்வாயில் 2 ஆம் போகம் சாகுபடி செய்துள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவத்தில் கடந்த 2014 இல் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ததால் 6 ஆண்டுகளுக்கு பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, ம

மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளவை எட்டியது. இதன் பயனாக தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் முழு அளவில் பிசான பருவம் சாகுபடி செய்யப்பட்டது.

பிசான அறுவடை முடிவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களில் முன் கார் பருவம் சாகுபடி செய்ய பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

மணி்முத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்தில் 2756.62 ஏக்கர் நிலங்களில் முன் கார் பருவ சாகுபடி செய்ய தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே 8 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் பிரதான கால்வாயில் 4 ரீச் குளங்கள் மூலம் பாசனம் பெறும் 24,500 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது.

பிரதான கால்வாய் பாசனக் குளங்களில் இருப்பு இருந்த நீரை கொண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் 2 ஆம் போகம் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மார்ச் 31 ஆம் தேதி நிறுத்தப்பட்டதால் இப்பாசனத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் கருகும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாக குறையும் வரை இந்நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முன்னாள் எம்.எல்.ஏ. பா. வேல்துரை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி: இதனை தொடர்ந்து மணிமுத்தாறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து இக்கால்வாயில் 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சனிக்கிழமை அணையின் நீர்மட்டம் 83.90 அடியாக உள்ளது. நீர்இருப்பு 80 அடியாக குறையும் வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்க  வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து பிரதான கால்வாய் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.