ஜெயலலிதா விடுதலை: நெல்லையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
திருநெல்வேலி சந்திப்பில் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை செயலர் மு. ஹரிஹரசிவசங்கர் தலைமையில் திரண்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு லட்டு கொடுத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி. ஆதித்தன், பி. தர்மலிங்கம், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் ந. மோகன், எஸ்.கே.ஏ. ஹைதர்அலி, முன்னாள் மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா, முன்னாள் ஜெயராணி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் செல்லத்துரை, மாநகர் மாவட்ட துணைச் செயலர் தேவகிகுழந்தைவேல், மாமன்ற உறுப்பினர்கள் வண்ணை கணேசன், பேபிசுந்தரம், முத்துலட்சுமி உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். நகராட்சி துணைத் தலைவர் ரா. மாரிமுத்து, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் வி. சிவன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலர் ஆர்.எம். வெங்கட்ராமன் தலைமையில் அம்பாசமுத்திரம் நகர செயலர் த. அறிவழகன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...