நெல்லை மாவட்டத்தில் இடியுடன் மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 1 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 7 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 4 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 1.6 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 2 மி.மீ மழையும்,சங்கரன்கோவிலில் 2 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே புதன்கிழமை விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் இடியுடன் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...