கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தற்கொலை செய்த அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட அக்கட்சியின் தொண்டர் குடும்பத்திற்கு சனிக்கிழமை ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

News image
Updated On :16 மே 2015, 7:15 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட அக்கட்சியின் தொண்டர் குடும்பத்திற்கு சனிக்கிழமை ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவை சேர்ந்தவர் முத்தையா (55). அதிமுக தொண்டரான இவர் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என வேண்டி இம்மாதம் 8 ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது குடும்பத்திற்கு அதிமுக மாவட்டச் செயலர், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் இ. நடராஜன் ஆகியோர் தலா ரூ. 25 ஆயிரம் நிதி உதவி அளித்தனர். இதனிடையே முத்தையா குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலர் அறிவித்தார்.

அதற்கான காசோலையை சனிக்கிழமை கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலரும், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன் முத்தையா மனைவி இசக்கியம்மாளிடம் வழங்கினார்.

அப்போது கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி, பி.ஜி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட துணைச் செயலர் செவல் எஸ். முத்துசாமி, இணைச் செயலர் பார்வதிபாக்கியம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ப. முத்துக்கிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் எம். செல்வராஜ், அருள்வேல்ராஜன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் கூனியூர் மாடசாமி, அம்பை நகரச் செயலர் த. அறிவழகன், கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.பி. ஆதம், லட்சுமிபதி கூட்டு்றவு பண்டகசாலை தலைவர் ஆர். மாரிராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள் கே.எம். ஷேக்மைதீன், மணி, தொழிற்சங்க தலைவர் ஆர். விஸ்வநாத், தொழிற்சங்க செயலர் எம்.கே.பி. அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.