கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் தொடரும் கோடை மழை!

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நீடித்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.

News image
Updated On :16 மே 2015, 8:12 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை நீடித்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலராக மழை பெய்து வருகிறது. இம்மாதம் 4 ஆம் தேதி கத்திரி வெயிலான அக்னிநட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், அணைகளிலிருந்து முன் கார் பருவ சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நீர்மட்டம் குறையவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்பட பரவலாக மிதமான மழை பெய்தது. மழையால் வெப்பம் இன்றி இதமான சூழல் நிலவியது.

அணைகளின் நீர்இருப்பு: சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 69.60 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82.51 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 56.10 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 41.01 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 35 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.