ஈவிகேஎஸ் இளங்கோவன் செவ்வாய்க் கிழமை தூத்துக்குடி வருகை
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகிறார்.


தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிள் ஏபிசி வீரபாகு மற்றும் கே.டி. கோசல்ராம் ஆகியோரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (மே 19) பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகிறார்.
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் எஸ். ஜஸ்டின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சியின் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். மேலும், கே.டி. கோசல்ராம் நினைவாக தபால் உறை வெளியிடப்படுகிறது.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள் ஏடிஎஸ் அருள் (மாநகர்), சிவசுப்பிரமணியம் (தெற்கு), ஆர். காமராஜ் (வடக்கு) உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...