நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: கருப்பாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 44.29 அடியாக இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 13, சேர்வலாறு அணை 5,மணிமுத்தாறு அணை 17.2, ராமநதி அணை 5, கருப்பாநதி அணை 9, குண்டாறு அணை 8.2, அடவிநயினார் அணை 7, வடக்குப் பச்சையாறு அணை 2, நம்பியாறு அணை 2, கன்னடியன் அணைக்கட்டு 13.
பாளையங்கோட்டை 3, திருநெல்வேலி 1.3, சேரன்மகாதேவி 3, களக்காடு 6.4, தென்காசி 4, செங்கோட்டை 9, ஆய்க்குடி 15.2, அம்பாசமுத்திரம் 4, ராதாபுரம் 13, நான்குனேரி 7, ஆலங்குளம் 6.2, சிவகிரி 11.
நீர்வரத்து அதிகரிப்பு:
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 600 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 400 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 98 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 89 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் நிலவரம்:
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.17 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடி, கடனாநதி அணை 56.20 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.29 அடி உயர்ந்து 44.29 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 35.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...