களக்காட்டில் மின்மாற்றியில் திடீர் பழுது: டி.வி உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வெள்ளிக்கிழமை மாலை மின்மாற்றியில் ஏற்பட்ட திடீர் கோளாறால் வீடுகளில் உள்ள டி.வி. உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்தன.


திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வெள்ளிக்கிழமை மாலை மின்மாற்றியில் ஏற்பட்ட திடீர் கோளாறால் வீடுகளில் உள்ள டி.வி. உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்தன.
களக்காடு செய்கு லெப்பை நயினார் அவுலியா தர்ஹா அருகேயுள்ள மின்மாற்றியில் இருந்து கோயில்பத்து மேலகட்டளைத்தெரு, செட்டியார் தெரு, காவல்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையி்ல் நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) திடீரென மின்மாற்றி பகுதியி்ல் உள்ள உயர்மின் அழுத்தக் கம்பிகள் உரசிக் கொண்டதாம். அப்போது, திடீரென மின்மாற்றி பழுதாகி உயர் மின்னழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் கோயில்பத்தில் உள்ள வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கி மின்விநியோகத்தை சீரமைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...